பெட்ரோல் விலை உயரவே இல்லை -உளரும் பாஜக அமைச்சர்

0

இந்தியாவில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு எட்டியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே செல்வதாகக் கூறுவது தவறான செயல் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர் வேணுகோபாலின் பெட்ரோல் விலை குறித்த கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பிரதான், “பெட்ரோல், டீசல் மீது வரி விதிப்பதில் மத்திய பாஜக அரசு மிகக் கவனமாக செயல்படுவருகிறது. கடந்த 300 நாள்களில் 60 நாட்கள் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இது தவிர பெட்ரோல் விலை 7 முறையும், டீசல் விலை 21 முறையும் விலை குறைந்திருக்கின்றன. 250 நாட்களில் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்திருக்கிறது. ஆகையால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வதாகப் யாரும் கூறவேண்டாம்” என்று தெரிவித்தார்.

இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90-ஐ தாண்டி உள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.90.18 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.83.18 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது.

சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளை கவலையடையச் செய்துள்ளது. விரைவில் விலை குறைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed.