இந்திய பொருளாதாரம் சரிவு: இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் மோடி!

0

கடந்த 2017-18 8.1 ஆக இருந்த ஜிடிபி புள்ளிகள் தொடர்ந்து சரிவை சந்தித்து 2019ன் முதல் காலாண்டில் 5 புள்ளிகளாக இருந்தன.

தற்போது 2019-20ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் புள்ளி விவரத்தில் ஜிடிபி புள்ளிகள் 4.1 ஆக குறைந்துள்ளன. தொடர்ந்து ஜிடிபி புள்ளிகள் குறைந்து வருவது இந்திய பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளிவிடும் என எதிர்கட்சிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

நேற்று இலங்கை அதிபரை சந்தித்த பிரதமர் மோடி இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த 872 கோடி ரூபாய் அளிப்பதாக கூறியுள்ளார்.

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கும் நிலையில் இலங்கை பொருளாதாரத்தை காப்பாற்ற மோடி வாரி இறைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்து.

Comments are closed.