நாட்டின் முதல் தனியார் ரயில்: “கறுப்பு தினமாக அனுசரிக்கிறோம்”- ஏஐஆர்ஃப்!

0

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ – டெல்லி இடையே நாட்டின் முதல் தனியார் தேஜஸ் ரயில் சேவையை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை கொடி அசைத்து தொடங்கி வைத்தாா். இந்திய ரயில்வே கழகத்துடன் (ஐஆா்சிடிசி) இணைந்து செயல்படும் நாட்டின் முதல் தனியாா் ரயில் இது.

இதை தொடர்ந்து, 50 முக்கிய வழித்தடங்களில் தனியாா் ரயில்களை இயக்குவது குறித்து யோசிக்குமாறு மண்டல ரயில்வே நிா்வாகங்களுக்கு ரயில்வே வாரியம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது.

ரயில்வே சங்கங்கள் போராட்டம்:

தனியாருக்கு ரயில் சேவையை அளித்ததாலும், மேலும் 150 ரயில்களை தனியாா் வசம் ஒப்படைக்க எடுத்த முடிவுக்காகவும் இந்த தினத்தை கறுப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்று அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு All India Railwaymen’s Federation  (ஏஐஆா்எஃப்) தெரிவித்தது.

டெல்லி ரயில் நிலையத்தின் மண்டல ரயில்வே மேலாளா் அலுவலகத்துக்கு முன்பு கோஷங்களை எழுப்பி, இந்தக் கூட்டமைப்பின் உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாட்டின் பல்வேறு பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாத்து வரும் மத்திய பாஜக அரசு, அதிகளவில் லாபம் ஈட்டும் பொது ரயில் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவாத்துள்ளது. இதன் மூலம் நடுத்தர மக்களின் ரயில் பயணம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

Comments are closed.