ஆட்டோ மொபைல் துறையில் 20 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!

0

இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறை கடும் சரிவை சந்தித்து வருவதாக தினந்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான வாகன விற்பனை 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்து இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது.

இதில் பயணிகள் வாகன விற்பனையானது 25 சதவிதமும், வணிக வாகன விற்பனை 20 சதவிதமும், இரு சக்கர வாகன விற்பனை 15 சதவிதமாகவும் குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை டாட்டா மோட்டார்ஸ் விற்பனை 34 சதவிதமும், அசோக் லோண்ட் 29 சதவிதமும், மாருதி சுசூக்கி 24 சதவிதமும், ஹீரோ மோட்டார் 17 சதவிதமும் விற்பனையில் வீழ்ச்சியை அடைந்துள்ளது.

Comments are closed.