டெல்லி காற்று மாசுக்கு பாகிஸ்தானும், சீனாவும் காரணம்- பாஜக நிர்வாகி புகார்

0

டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருவதற்கு பாகிஸ்தானும், சீனாவும் காரணம் என உ.பி. பாஜக மூத்த தலைவர் வினித் அகர்வால் ஸ்ரதா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவை பார்த்து பயப்படுகிறது. இதனால் நம் நாட்டில் பாகிஸ்தான் நச்சு வாயுவை கசிய வைத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுயுள்ள பகுதிகளின் காற்றை மாசுபட வைக்கிறது. இதன் மீது மத்திய அரசு விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இதுவரை இந்தியாவுடன் தொடுத்த போர் அனைத்திலும் பாகிஸ்தானுக்கு தோல்வியே கிடைத்துள்ளது.

பிரதமராக நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது முதல் பாகிஸ்தானுக்கு சிக்கல் உருவாகி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.