ஏராளமான பொய்களை பரப்பி வரும் யோகி ஆதித்யநாத்- அகிலேஷ் யாதவ்

0

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜகவினர் மத்தியில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, ‘நாம் அனைவரும் ராமரின் பக்தர்கள். பக்திக்கு ஏராளமான சக்திகள் இருக்கிறது. விரைவில் நமக்கு நற்செய்தி கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாதின் கருத்துக்கு சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ‘அயோத்தி விவகாரத்தில் நல்ல செய்தி காத்திருக்கிறது என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். என்ன நடக்கப்போகிறது என்பதுகுறித்து அவருக்கு எப்படி தெரியும்.

உ.பியில் ஆளும் அரசு தனியார் மயமாக்குவதில் அதிகமான ஆர்வத்தில் இருக்கிறது, சிறுபான்மையியனர்களுக்கு எந்தவிதமான வேலையும் இருக்காது. வளர்ச்தித் திட்டங்களில் ஏராளமான பொய்களை இந்த அரசு மக்களிடம் கூறுகிறது’ எனத் தெரிவித்தார்.

Comments are closed.