பாஜக ஆட்சியில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

0

நாட்டின் பொருளாதாரம் இதுவரை கண்டிடாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக பொறுளாதார நிபுணர்கள் தெரிவித்து வருவதோடு, இதற்கான தீர்வையையும் கூறி வருகின்றனர். இதனையெல்லாம் மத்திய பாஜக அரசு கண்டுக்கொள்ளாமல், நாட்டில் பொருளாதார வீழ்ச்சியே ஏற்படவில்லை என்பது போல மூடி மறைத்து வருகிறது.

பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் தான் இளைஞர்கள் அதிகமாக வேலையில்லாமல் இருப்பதாக சி.எம்.ஐ.இ முன்பே கூறியது. இது குறித்து, இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சி.எம்.ஐ.இ – Centre for Monitoring Indian Economy (CMIE) மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபரில் 8.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது மிக அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பரில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 7.2 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு செப்டம்பரில் அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் 5.2 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதுவே கடந்த ஓர் ஆண்டில் மிக மோசமான செயல்பாடு எனவும் தெரிவித்துள்ளது.

Comments are closed.