வியாபாரிகளை ஏமாற்றிய ஜி.எஸ்.டி: மன்னிப்பு கோரிய நிர்மலா சீதாராமன்!

0

புனேயில் நேற்று நடைபெற்ற ஜி.எஸ்.டி குறித்த முதல் ஆய்வுக் கூட்டத்தில் தொழிலதிபர்கள், தனியார் நிறுவனங்களின் தலைமைச் செயல் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அப்போது பேசிய அவர், ‘ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் வர்த்தகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற  வேண்டும் என்ற அரசின் எண்ணம் தொடக்கத்திலிருந்தே வீழ்ச்சியடைந்தது. அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.

குறைபாடுகள் இருந்தாலும் ஜி.எஸ்.டி-யை கைவிட முடியாது. ஜி.எஸ்.டி சட்டம் நாடாளுமன்றத்திலும், அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. தொடர் ஆலோசனைகள் மூலம் குறைகளைக் தீர்க்க முயற்சி எடுக்கப்படும்’ இவ்வாறு தெரிவித்தார்.

Comments are closed.