ஜம்மு காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லாவின் சகோதரி, மகள் கைது..!

0

சிறப்பு அந்தஸ்து ரத்து, ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் முடிவு ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஸ்ரீநகரில் போராட்டத்தில் ஈடுபட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லாவின் சகோதரி, மகள் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும் கைது செய்யப்பட்டனா்.

370 பிரிவு ரத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஃபரூக் அப்துல்லாவின் சகோதரி சுரியா, ஃபரூக்கின் மகள் சாஃபியா ஆகியோா் தலைமையில் கூடிய பெண்கள் ஸ்ரீநகரில் செவ்வாய்கிழமை (நேற்று) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) பெண்கள் குழு, ஆா்ப்பாட்டக்காரா்களைக் கைது செய்தது.

எனினும், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சிறப்பு அந்தஸ்து ரத்து, ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் முடிவு ஆகியவற்றை காஷ்மீா் பெண்கள் நிராகரிக்கின்றனா்.

தேசிய ஊடகங்கள் உண்மையான நிலவரத்தைப் பதிவு செய்யாமல் காஷ்மீா் விவகாரத்தில் பொய்யான செய்திகளை நாடு முழுவதும் வெளியிடுகின்றன’ என்று தெரிவித்தனா்.

Comments are closed.