முஸ்லிம்கள் பாகிஸ்தானியர்கள், சீக்கியர்கள் காலிஸ்தானியர்கள்: முத்திரை குத்தும் பாஜக

0

ஜம்மு கஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர், மெஹபூபா முஃப்தி, “ஜம்மு காஷ்மீரில் எதிர்ப்பு குரல்கள் நசுக்கப்படுவதாகவும், ஜனநாயகமற்ற சூழலை பாஜக உருவாக்கி வருவதாகவும்  குற்றம் சாட்டினார்.

மெஹபூபா முஃப்தி,“அவர்கள் என்னை முடக்க நினைக்கிறார்கள். எனது கட்சியை தடை செய்ய விரும்புகிறார்கள். வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370- ஐ ரத்து செய்தது குறித்து தொடர்ச்சியாக நான் பேசி வருவதாக கூறுகின்றனர்.

முஸ்லிம்களை பாகிஸ்தானியர்கள், சீக்கியர்கள் காலிஸ்தானியர்கள், சமூக ஆர்வலர்கள் நகர்ப்புற நக்சல்கள், மாணவர்கள் சமூக விரோதிகள்” என்று பாஜக முத்திரை குத்துகின்றனர். நாட்டில் அனைவரும் பயங்கரவாதிகள் என்றால், பின்பு யார் தான் இந்தியர்கள் என்று எனக்கு புரியவில்லை. பாஜக-வினர் மட்டும் தான் இந்தியர்களா? 370வது பிரிவை மீண்டும் நிலைநிறுத்தாத வரை பிரச்சினை தீர்க்கப்படாது. தேர்தல்களை நடத்துவது பிரச்சினைக்கு தீர்வாகாது” என்று மெஹபூபா முஃப்தி தெரிவித்தார்.

ஜம்மு கஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புல்வாமா மாவட்டத்தில், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் (DDC) தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்த மூன்றே நாட்களில் மக்கள் ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி தலைவர் வாஹித்-உர்-ரஹ்மான் பாராவை தேசிய விசாரணை முகமை  கைது செய்தது.

வாஹித்-உர்-ரஹ்மான் குடும்பத்தினரை சந்திக்க புல்வாமாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தத மெஹபூபா முஃப்தியை காவல்துறை தடுத்து நிறுத்தினர். மேலும் மெஹபூபா முப்திக்கு  வீட்டிலிருந்து இருந்து ஊடகங்களுக்கு பேட்டியளிக்கவும் தடையும் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.