மோடி துவக்கிவைத்து பயணம் செய்த படகு நிறுவனம் வீழ்ச்சி!

0

குஜராத் மாநிலத்தில் மோடி துவக்கிவைத்து பயணம் செய்த, படகு நிறுவனம் நஷ்டம் காரணமாக அதன் இரண்டு படகுகளையும் விற்க முடிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் ‘ரோரோ’ என்ற படகு நிறுவனம் (RORO ferry service, Gujarat), கடந்த 2017ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் முதற்கட்ட படகு போக்குவரத்து சேவையை, நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அத்துடன் ‘ஐலேண்ட் ஜேட்’ எனும் படகில் பயணமும் செய்தார். இந்த படகு சேவை, தெற்காசியாவின் முதல் உலகத்தரம் வாய்ந்த சேவை என்று கூறப்பட்டது.

காம்பட் வளைகுடாவில் உள்ள கோஹா மற்றும் தாஹேஜ் நகரங்களுக்கு இடையே இந்த சேவை துவங்கப்பட்டது. இந்த 2 நகரங்களுக்கும் இடையிலான தரைவழித் தூரம் 360 கிலோ மீட்டர். ஆனால், கடல் வழியில் வெறும் 31 கிலோ மீட்டர்தான் என்பதால், 8 மணிநேர பயணம், 1 மணிநேரப் பயணமாக குறைந்தது. ஆனால், துவங்கியது முதலே ‘ரோரோ’ நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது.

இதனிடையே, கடந்த ஆண்டிலிருந்து, கடுமையான நஷ்டம் அடைந்துவருவதால் ‘ரோரோ’ நிறுவனம் தனது இருபடகுகளையும் விற்கப்போவதாக அறிவித்துள்ளது.

Comments are closed.