133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்

0

வீழ்ச்சியடைந்துள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் திட்டம் வைத்திருப்பதாக மோடி தெரிவித்தார். மோடியின் அறிவிப்பில் அடங்கியுள்ள ரகசியம் விரைவில் வெளியிடப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மோடியின் அறிவிப்பை சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். 2014 தேர்தலின்போது, வெளிநாடுகளில் உள்ள ரூ. 15 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்டு, அதனை ஒவ்வொரு இந்தியருக்கும் பகிர்ந்து அளிப்பேன் என்று மோடி ஏமாற்றியதை நினைவுபடுத்தியுள்ளார்.

“மோடி முன்பு ரூ. 15 லட்சம் கோடி என்று வாக்குறுதி அளித்தார். இப்போது ரூ.20 லட்சம் கோடி அளிப்பதாக கூறுகிறார். இந்த முறை மோடி அரசு அறிவித்த தொகையில் எத்தனை பூஜ்ஜியங்கள் என்று மக்கள் கேட்க மாட்டார்கள். எத்தனை பொய் வாக்குறுதிகள் என்று கேட்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ள அகிலேஷ் யாதவ், “133 கோடி மக்களிடம் 133 முறை பொய்யான வாக்குறுதிகளை மோடி அரசு அளித்து விட்டது” என்றும் விமர்சித்துள்ளார்.

 

Comments are closed.