இந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு

0

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சென்ற மார்ச் காலாண்டில் 3.1 சதவீதமாக சரிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

2019-20-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் ( 2020 ஜனவரி முதல் மார்ச் 2020) நாட்டின் தயாரிப்புத் துறையின் வளர்ச்சி 1.4 சதவீத பின்னடைவை சந்தித்துள்ளது. அதேபோன்று, கட்டுமானத் துறையின் வளர்ச்சியும் 2.2 சதவீதம் முடங்கியது.

ஒட்டுமொத்த அளவில் இந்தியாவின் பொருளதார வளர்ச்சி ஜனவரி-மார்ச் காலாண்டில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த 2008-இல் சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப்பின் பொருளாதார வளர்ச்சி இந்த அளவுக்கு சரிந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகளவில் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தின் தாக்கம் அடுத்த காலாண்டில்தான் முழுமையாக தெளிவுபெரும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019-20 முழு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக இருந்தது. கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். கடந்த 2018-19 நிதியாண்டில் இந்த வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளை போலவே இந்தாண்டும் பாஜக, நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் சீர்குலைத்து விட்டதன் விளைவாக இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாடு இதுவரை சந்தித்திடாத வேலையில்லா திண்டாட்டம். பணவீக்கம், ஜி.எஸ்.டி வரி வசூல் போன்ற கடுமையாக பொருளாதார நடைமுறைகளால் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Comments are closed.