மோடியை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் -விவசாய சங்கங்கள் அறிவிப்பு

0

பாஜக அரசை கண்டித்தும், மோடியை எதிர்த்தும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

பாஜக அரசு நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 27ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, டிசம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும், INDIAN FARNAEஅன்றைய தினம் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்படும் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதுபோல திமுகவும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கருப்புக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளது.

Comments are closed.