விவசாயிகளின் போராட்டத்தை பிளவுபடுத்த பாஜக முயற்சி

0

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என விவசாயிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

இதுபற்றி விவசாயத் தலைவர் தர்ஷன் பால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:

“விவசாய அமைப்புகளிடையே பிளவுகளை ஏற்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. ஆனால், அது நடக்காது. 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும்” என்றார் அவர்.

மற்றொரு விவசாயத் தலைவர் குர்னம் சிங் பேசுகையில், “புதிய சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நாள்களில் மேற்கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்புக்கு முன்பு, சுமார் 32 விவசாய சங்கத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர் எனபது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.