மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரிட்டிஷ் பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்

0

டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திடுமாறு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களாஅல் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், “அமைதியான முறையில் போராடிவரும் விவசாயிகள் மீது நரேந்திர மோடி அரசு, குளிர்நீரைப் பீய்ச்சி அடித்ததையும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியதையும், கொடூரமான முறையில் அடக்குமுறையை ஏவியதையும் குறிப்பிட்டுள்ளனர்.

போரிஸ் ஜான்சன், குடியரசு தின அணிவகுப்புக்கு சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு வர இருந்தார். ஆனால் அங்கு கோவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால் அவரது பயணம் ரத்தானது.

இந்நிலையில், இரு நாட்டு பிரதமர்களும் விரைவில் சந்தித்துப்பேச இருப்பதாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், போராடும் இந்திய விவசாயிகளின் பிரச்சனையின் அவசர முக்கியத்துவத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply