TRP மோசடியில் சிக்கிய அர்னாப் கோஸ்வாமியின் REPUBLIC TV: மும்பை போலீஸ் வழக்குப்பதிவு

0

TRP ரேட்டிங்கை போலியாக அதிகரித்துக்காட்டி மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டி.வி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

விளம்பர வருவாயை அதிகரிப்பதற்காக, TRP ரேட்டிங்கை அதிகரித்துக்காட்டும் வகையில் செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை கமஷ்னர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய மும்பை போலிஸ் கமிஷனர் பரம் பீர் சிங், “TRP-க்காக பெரிய தொகையை வழங்கி தங்கள் சேனலை முழு நேரத்திலும் வீடுகளில் ஓடவிட வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வீடுகளில் செட்டாப் பாக்ஸை இன்ஸ்டால் செய்யும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்.

TRP மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 சேனல்கள் மீது மும்பை போலிஸ் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது” என மும்பை காவல்துறை கமஷ்னர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.

Comments are closed.