நாட்டின் விஞ்ஞானிகளை நம்பாத இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் -பாஜக எம்.எல்.ஏ திமிர் பேச்சு

0

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் இந்திய விஞ்ஞானிகளை நம்பாத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என உத்தப்பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சிங் சோம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் வேக்ஸின், கோவிட் ஷீல்ட் தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த தடுப்பூசிகள் வரும் 16ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் சர்தானா தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

புதன்கிழமை (இன்று) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் “நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. பிரதமர் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களது நம்பிக்கை பாகிஸ்தான் மீது உள்ளது. நாட்டின் விஞ்ஞானிகளை சந்தேகிக்கும் இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம்” என தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் குறித்த அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply