ரயில்வே துறையை தனியாருக்கு வழங்குவது ஏழைகளுக்கு அச்சுறுத்தல்: பாஜக மீது ராகுல் விமர்சனம்

0

ரயில்வே துறையை தனியார்மயம் ஆக்குவது லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு அச்சுறுத்தல் என ராகுல் காந்தி பாஜக அரசை விமர்சித்துள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

“ரயில்வே துறை நாட்டின் ஒரு அங்கம். அது எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தம். லட்சக்கணக்கான மக்கள் ரயில்வே மூலம் குறைந்த விலையில் பயணம் செய்கின்றனர்.

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் அரசின் நோக்கத்தை கடந்த நிதிநிலை அறிக்கை தாக்கலில் கவனித்தேன். ரயில்வேவைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு இது அச்சுறுத்தல். ரயில்வேவில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கும் இது பிரச்னையை உண்டாக்கும்” என்றார் ராகுல்.

Leave A Reply