குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

0

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கனிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்க, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் திங்கட்கிழமை (நேற்று) தாக்‍கல் செய்தார்.

இதனால அஸ்ஸாமில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அனைத்து மோரன் சங்கம் (ஏஎம்எஸ்யு) சாா்பில் அறிவிக்கப்பட்ட 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் முக்கிய நகரான குவாஹாட்டி உட்பட பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

மேலும், டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் மாணவர்களும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதரீதியாக மக்களை பிளவுப்படு​த்தும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி முழக்கமிட்டனர்.
மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து விவாதிக்க 293 எம்பிக்கள் ஆதரவு மற்றும் 82 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும் இந்த சட்டத்திருத்தம், மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய வடகிழக்‍கு மாநிலங்களுக்‍கு பொருந்தாது என்றும் தெரிவித்தார்.

Comments are closed.