இந்திய கிரிக்கெட் வாரியத்தை கையில் எடுக்கும் பாஜகவினரின் வாரிசுகள்…!

0

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் செயலராக மத்திய அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் திங்கள்கிழமை (இன்று) தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதேபோன்று முன்னாள் பிசிசிஐ தலைவரும், தற்போதைய மத்திய இணையமைச்சருமான அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால், பொருளாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். கேரள கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ், இணைச் செயலராக தேர்வாகிறார்.

இதற்கான மனு தாக்கல் கடைசி நாளான இன்று நடைபெறவுள்ளது. பின்னர் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் இவர்கள் அனைவரும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

பிசிசிஐ தலைவர் பதவிக்கு, முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், சௌரவ் கங்குலி பெயரை விருப்பம் தெரிவித்தார் பின்னர் அதுவே இறுதி செய்யப்பட்டது. மேலும் ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் படேலை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

Comments are closed.