தாள்ளாடுகிறது இந்திய பொருளாதாரம்- நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து

0

2019ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுபஃல்லோ, மைக்கேல் கிரேமர் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் விருது அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்புகூட அபிஜித் பானர்ஜி, தொழில் வல்லநர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளில் பிரதமர் அலுவலகம் குறைவாக தலையிட வேண்டும் என்றும் பொதுவாக இந்திய அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் பேசியிருந்தார்.

தொலைக்காட்சிகளில் பேசிய பானர்ஜி, இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை தள்ளாட்டத்தில் உள்ளது.  நிலையான வளர்ச்சி என்பது தற்போது முற்றிலும் இயலாத ஒன்று என தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் செய்த விந்தையான செயல்களில் பணமதிப்பழிப்பும் ஒன்றாகும் எனக் கூறியிருந்தார்.

“தீவிரமாகக் கருதத்தக்க எந்தப் பொருளாதாரமும் இதில் இல்லை. நல்லது செய்யும் என்பதற்கு எந்தவித காரணமும் இல்லை” என தி வயர் இணைய ஊடகத்திடம் பேசியபோது அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் மார்ச் 2019ஆம் ஆண்டு இந்திய புள்ளியியல் அறிக்கையை வெளியிடாமல் வைத்திருந்த மோடி அரசாங்கத்தை கண்டித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 108 கல்வியாளர்களுடன், நோபல் பரிசு பெற்ற இவர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.