அதிகரிக்கும் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலை!

0

தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மன அழுத்தம், பணிச்சுமை காரணமாக பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரிப்பதாக தெரிகிறது. கடந்த 7 வருடங்களில் 750 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போது ஏற்பட்ட தியாகத்தை விட அதிகமாகும்.

இதனால், மத்திய உள்துறை அமைச்சகம் வீரர்களில் தற்கொலையை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறும்போது, ” உளவியல் நிபுணர்கள் உதவியுடன் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு புத்துணார்வு முகாம்கள் நடத்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வீரர்களின் தற்கொலைக்கு காரணம், நீண்ட காலம் தனது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது, பதவி மற்றும் ஊதிய உயர்வு கிடைக்காமல் இருப்பது மற்றும் பணிச்சுமை போன்றவைகளே ஆகும்.

இவ்வாறு பாதிக்கப்பட வீரர்களை உடனடியாக உளவியல் நிபுணர்களின் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது”.

Leave A Reply