பாபர் மஸ்ஜித் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை- சன்னி வக்பு வாரியம்

0

லக்னோவில் சன்னி வக்பு வாரியத்தின் முக்கிய கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிறகு பேசிய பேசிய அதன் தலைவர் ஜுஃபர் ஃபரூக்கி, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

சன்னி வக்பு வாரியத்தின் 6 உறுப்பினர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, மசூதி கட்டுவதற்காக வழங்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.