மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு பின்னால் இந்தியா

0

உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளில், பாகிஸ்தானுக்கு பிறகு தான் இந்திய உள்ளது என ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ஆம் தேதி உலக மகிழ்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகையால் ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நிலை குறித்து ஐ.நா. பட்டியல் வெளியிட்டு வருகிறது. இதில் சுதந்திரம், வருவாய், நம்பிக்கை, ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு மற்றும் தாராள மனப்பக்குவம் ஆகிய ஆறு வகை மகிழ்ச்சியை கணக்கில் கொண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது

இதன்படி இந்தியா, கடந்த ஆண்டு 133 வது இடத்தில் இருந்தது. இந்தாண்டு 7 இடங்கள் குறைந்து 140வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் 67-வது இடத்தையும், பங்களாதேஷ் 125வது இடத்திலும் உள்ளது.

இதில் உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் பின்லாந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.

Comments are closed.