இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

1

2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி குறைவிற்கு பல பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் பிரதமரும் பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங், இந்திய பொருளாதார நிலை குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காங்கிரஸ் கட்சியின்  ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. அதில், ‘ இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்திய பொருளாதாரம் இதைவிட வேகமாக வளர்க்க கூடிய சூழல் இருந்தும், மோடி அரசின் தவறான கொள்கைகளால் வளர்ச்சி குறைந்துள்ளது.

மேலும் உற்பத்தி துறையின் வளர்ச்சி வெறும் 0.6 சதவிகிதமாக இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது மோடி அரசு எடுத்த பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வரவில்லை என்று தெரிகிறது. இந்திய பொருளாதாரத்தில் தற்போதைய நிலை நீடிக்க கூடாது. ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பொருளாதாரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Discussion1 Comment

  1. என்ன சொன்னாலும் ஒன்னும் நடக்கப்போவது இல்லை, கற்காலத்திற்கு கொண்டு செல்லாமல் பாசிசம் விடாது