பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றத்தை மிரட்டுகிறதா ஆர்.எஸ்.எஸ்..?

0

பாபர் மஸ்ஜித் நில வழக்கின் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவுபெற்ற நிலையில், தீர்ப்பை எதிர்ப்பார்த்து நாடே காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த தீர்ப்பு, இந்துக்கள் கோயில் கட்ட சாகமாக வரும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே தங்களுக்கு ஆதரவாகதான் தீர்ப்பு வரும் என்று கூறுவது நீதிமன்றத்தை மிரட்டுவதுபோல உள்ளது என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

இந்நிலையில், பாபர் மஸ்ஜித் வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் அதை எங்களுடைய வெற்றியாக கொண்டாட மாட்டோம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். ஜம்மு கஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370தை ரத்து செய்தபோது அதை எங்களுடைய வெற்றியாக கொண்டாடினோமா? அதைபோல் பாபர் மஸ்ஜித் தீர்ப்பையயும் கொண்டாடபோவதில்லை என்று முன்னும் பின்னுமாக பேசி வருகின்றனர், ஆர்.எஸ்.எஸினர்.

Comments are closed.