இனி மோடியின் முழக்கம் “ஜெய் ஹிந்த் இல்லை, ஜியோ ஹிந்த்”- சீதாரம் யெச்சூரி!

0

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தின் தஹானு தொகுதியில் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் வினோத் நிகோலுக்கு ஆதரவாக  தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:-

இந்திய நாட்டையும் அதன் குடிமக்களையும் காப்பாற்றுவதற்காக பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். பாஜக  தலைமையிலான அரசின் ஜிஎஸ்டி மற்றும் நட்பு முதலாளித்துவம் காரணமாக நாடு இதுவரை ஏற்படாத வகையில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு உதவுவதற்காக அரசுக்கு சொந்தமான BSNL மற்றும் MTNL ஆகியவற்றை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-இன் “ஜெய் ஹிந்த்” முழக்கத்திற்கு பதிலாக, நரேந்திர மோடி-இன் புதிய முழக்கம் “ஜியோ ஹிந்த்” ஆகிவிட்டது. என்றார் யெச்சூரி.

Comments are closed.