பொருளாதார வீழ்ச்சியை ஒப்புக்கொண்டு புள்ளிவிவரங்களை வெளியிட்ட மோடி அரசு

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில் மத்திய பாஜக அரசு திட்டமிடப்படாமல் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. அதனால் பல சிறுகுறு தொழில் நிறுவனங்கள் படும் மோசமான வீழ்ச்சையை சந்தித்தது. அதோடு பல தொழிலாளர்களுக்கு வேலையும் பரிபோனது.

இதற்கு முன்னதாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்த வேலையில் மோடி அரசு திட்டமிடப்படாமல் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் தற்போது இந்தியாவின் பொருளாதாரமும் படுமோசமான நிலையை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள நிலக்கரி, எண்ணெய், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு தொழில் துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வவாண்டு கடுமையாக வீழ்ச்சி சந்துத்துள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியை தீர்க்க பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பல்வேறு பல பொருளாதரா நிபுணர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தொழில்துறை உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் சரிந்துள்ளதாக, மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் (நேற்று முன்தினம்) திங்களன்று, 2020 ஆகஸ்ட் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி மதிப்பீடுகளை வெளியிட்டது.

அதில் உற்பத்தி, சுரங்கம், உள்கட்டமைப்பு, கட்டுமானம், மின்சாரம் உள்ளிட்ட தொழில் துறைகளின் உற்பத்தி, தொடர்ச்சியாக 6ஆவது மாதமாக வீழ்ச்சியை கண்டுவருகிறது.

குறிப்பாக, 2020 ஆகஸ்டில் 8.0 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2020 ஆகஸ்டில் தயாரிப்பு தொழில்கள் 8.6 சதவிகிதம், சுரங்க தொழில் உற்பத்தி 9.8 சதவிகிதம், அத்தியாவசிய பொருட்கள் தொழில் துறை 11.1 சதவிகிதம், மின்சாரத் தொழில்துறை உற்பத்தி 1.8 சதவிகிதம், நடுத்தர பொருட்கள் உற்பத்தி 6.8 சதவிகிதம்,  மூலதன பொருட்கள் உற்பத்தி 15.4 சதவிகிதம்,  உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் தொழில் 2.3 சதவிகிதம் என வீழ்ச்சி கண்டுள்ளன. இவ்வாறு புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply