“மோடி ஒரு கோழை” -விளாசித் தள்ளிய ஜோதிமணி

0

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பல நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நம்மிடம் பேசியது; ‘மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது. இது ஒரு கருப்புச் சட்டம். கார்ப்ரேட்டுகளின் நலனுக்காகவும் கொண்டுவரப்பட்ட சட்டமான இது, விவசாயிகளை மட்டுமின்றி பொதுமக்களையும் பாதிக்கும்.

செங்கோட்டையில் கொடியேற்றியது பாஜ.வின் நபர் என செய்தியும், அந்த நபரின் படமும் வந்திருக்கிறது. பாஜகவின் குண்டர்களை ஏவிவிட்டு போராட்டத்தில் கலகமும் குழப்பும் விளைவிக்கிறார்கள். வன்முறை எப்போதும் தீர்வாகாது. இதுவரை விவசாயிகள் அமைதியாகத்தான் போராடியிருக்கிறார்கள். டெல்லியில் பாஜகதான் வன்முறையை ஏவி உள்ளது.

ஒரு நாடே, விவசாயிகள் எல்லாம் ஒரு சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும்போது அரசியல் கட்சிகள் எதற்கு இருக்கிறது. அப்படியே விவசாயிகளைக் கைகழுவி விடமுடியுமா? இன்று விவசாயிகள் எல்லை மீறியாதாக சொல்கிறார்கள். இதற்கு முன்னதாக விவசாயிகள் அமைதியாக ரோட்டில் உட்கார்ந்திருந்தபோது, அவர்களை காலிஸ்தானிகள், தீவிரவாதிகள் என இந்த அரசாங்கம் சொல்லவில்லையா?

இந்திய மண்ணில் கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக சீன ராணுவத்தினர் சீனர்களைக் கொண்டுவந்து வீடு கட்டி குடியமர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக சீனா எனும் வார்த்தையை உச்சரிக்க பயப்படும், அவர்கள் மீது தாக்குதலை தொடுக்க முடியாத அளவிற்கு கோழைத்தனமான பிரதமர்.

ஆகவே உடனடியாக இந்த மூன்று கருப்புச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் குரலாக ஒலிக்கும்’ என்றார் ஜோதிமணி.

Comments are closed.