இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 3 கோடி விவசாய கூலி தொழிலாளர்களின் வேலை பறிபோய் உள்ளது.

0

இந்தியாவில் விளை நிலங்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே விவசாயிகளாக கருதப்பட்டு வருகின்றனர். இதனால் விளை நிலத்தில் இறங்கி வேலை செய்யும் கூலித்தொழிலாளர்களுக்கு போதிய அரசு உதவிகளும் கிடைக்காமல் உள்ளன. இந்த நிலையில், கடந்த 2011 – 12 நிதியாண்டில் 10 கோடியே 90 லட்சமாக இருந்த விவசாய கூலிகளின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 7 கோடியே 7 லட்சமாக சரிந்துள்ளது.

இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 3 கோடியே 20 லட்சம் விவசாயக் கூலிகளின் வேலை பறிபோய் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், நிலம் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு வேறு தொழில்களை நோக்கி செல்கின்றனர். இதனால், விவசாயம் மட்டுமே தெரிந்த நிலமற்ற விவசாய கூலிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

Comments are closed.