கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடை விற்பனை வீழ்ச்சி!

1

ஆட்டோ மொபைல் துறை மட்டுமல்லாமல் பல்வேறு துறைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடைகள் விற்பனை வீழ்ந்துள்ளதாக பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது.

இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் உள்ளாடை விற்பனை பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது.  இந்தியாவில் இருக்கும் 4 முன்னணி உள்ளாடை நிறுவனங்கள் கடந்த 10 வருடங்களில் இல்லாத வகையில் தற்போது விற்பனை சரிவை சந்தித்துள்ளன.

இதுகுறித்து தெரிவித்த காங்கிரஸை சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், “கடந்த ஆண்டில் உள்ளாடை வாங்கியவர்கள் 100 பேர் என்றால் இந்த ஆண்டு 75 ஆக குறைந்துள்ளது. இதனால், உள்ளாடை நிறுவன பங்குகளும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டில் உள்ளாடை விற்பனை குறைந்தால் நாட்டின் பொருளாதாரம் ஏழ்மையான நிலையில் இருப்பதைக் குறிக்கும் என 1970 ஆம் அண்டு Men’s underwear index என்ற ஆய்விக்குழு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Discussion1 Comment

  1. அடப்பாவிகளா நிஜமாவே கோவணத்துல கை வைச்சுட்டானுங்களே….. உருவாம விடமாட்டாங்க போல…