குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா!

0

தேசிய குடியுரிமை சட்ட்த்திருத்த மசோதா மக்களவையில் கடந்த திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இப்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது.

மாநிலங்களயில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பெறப்பட்டது,   இதை தொய்டர்ந்து மாநிலங்களயிலும் குடியுரிமை சட்ட்த்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிரத்தும், அதை கொண்டுவந்த மத்திய பாஜக அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானதுஎன விமர்சிக்கப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில்,  மும்பையில் காவல்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ராஜினாமா செய்யபோவதாக தனது டிவிட்டரரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அப்துர் ரஹ்மான் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, “குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, வகுப்புவாதத்துடனும் அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளது. இது சட்டத்தை மீறிய செயல். இதனால் தான் எந்த பணியையும் தொடரப்போவது இல்லை. (டிசம்பர் 12) இன்று முதல் அலுவலகத்திற்கு  செல்லப்போவது இல்லை. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவே  பதவியை ராஜினாமா செய்யபோகிறேன்.

 

சகிப்புத்தன்மையுடனும், மதச்சார்பின்மையுடனும் நீதியுடன் ஒற்றுமையாக வாழ நினைக்கும் இந்து மக்களும்  இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும். ஜனநாயக முறையில் இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்” இவ்வாறு ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments are closed.