ஐபிஎல் போட்டியில் மோடிக்கு எதிராக ”காவல்காரன் திருடன்” என முழக்கமிட்ட ரசிகர்கள்

0

ஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, காவலாளியே திருடன் என்று பிரதமர் மோடிக்கு எதிராக பார்வையாளர்கள் தொடர்ந்து முழக்கமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் முழக்கங்களை எழுப்பினர்.

அதில் காவலாளியே திருடன் என பொருட்படும் Chowkidar Chor Hai என்ற முழக்கங்கள் அதிகளவில் இடம்பெற்றன. நாட்டின் காவலாளி என்று பிரதமர் மோடி தன்னை அழைத்து கொள்வதை விமர்சிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், காவலாளியை திருடன் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்காக உருவாக்கப்பட்ட Chowkidar Chor Hai என்ற முழக்கம் அரசியல் மேடைகளை தாண்டி ஐபிஎல் போட்டிகளை வரை எதிரொலிப்பது பாரதிய ஜனதா கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

Comments are closed.