அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது ஈரான்..!

0

அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஒரு நாட்டின் ராணுவத்தை, மற்றொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுவே முதல்முறை.

அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கம் என ஈரான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை தீவிரவாத இயக்க தலைமையகமாக அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவின் முப்படைகளும் தீவிரவாத இயக்கம் என்று ஈரான் கூறியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply