இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் -ஈரான் ஆயுதப்படை தலைவர்

0

ஈரான் நாட்டு அணு விஞ்ஞானி முஹ்சின் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டின் ஆயுதப்படை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பிரபல அணு விஞ்ஞானி முஹ்சின் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இக்கொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரானின் அணு ஆயுத திட்டத்தை வடிவமைத்த விஞ்ஞானியான முஹ்சினின் மரணம் தங்களுக்கு மிக பெரிய இழப்பு என அந்நாட்டு தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இதுவரை இந்த சம்பவத்திற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை எனவும் இஸ்ரலுக்கு அதிக தொடர்பு இருப்பதாகவும் ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் கூறியிருந்தார். இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை வாய்த்திறக்காமல் மௌனம் சாதித்து வருவதால், ஈரானுக்கு சந்தேகம் மேலும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் அணு விஞ்ஞானி முஹ்சின் அவர்களின் கொலைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டின் ஆயுதப்படை தலைவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.