பெங்களூரில் காஷ்மீரை சேர்ந்த அப்சர் ஜஹூர் என்ற மாணவரை இரும்பு கம்பிகளால் தாக்கிய கும்பல்

0

மார்ச் 20ஆம் தேதி பெங்களூருவில், HAL அருகே 24 வயதுடைய காஷ்மீர் மாணவரை ஏ.இ.சி.எஸ் எனும் அமைப்பினுடய குழுவினர்கள் அவரை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளானர்.

அவரை தாக்கிய நான்கு பேரை கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ​ அவர்களுக்கு ​ஜாமீன் வழங்கியதாக டெக்கான் ஹெரால்ட் பத்திரிக்கை தெரிவித்ததுள்ளது.

பாதிக்கப்பட்ட அப்சர் ஜஹூர் தார் என்பவர ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அவரை சுற்றி சுற்றி பயமுறுத்துயுள்ளனர்.

தகவலின்படி, அப்சர் ஜஹூர் மடோக் எனும் ஷாப்பில் காஃபி அருந்திக்கொண்டுருந்த போது, 5 நபர்கள் இவர் அருகில் வந்து மிரட்டியுள்ளனர். அதில் ஒருவர் நிதின் என்று அப்சர் ஜஹூர் தெரிந்திக்கொண்டார். நிதின் முன்னதாகவே ஈவ்-டீஸிங்கில் ஈடுபட்டதால், அப்சர் ஜஹூர் அவரை அடையாளம் கண்டார். அப்சர் ஜஹூர்-ஐ மிரட்டிய பிறகு தான் நிதின் உட்பட அவரின் குழுவினர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.

அடுத்த நாள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஒரு ஐஸ் கிரீம் பார்லரில் இருந்து அப்சர் ஜஹூர்-ஐ இழுத்துச் சென்று இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கத் தொடங்கினர். அவரை தாக்கியவர்கள், அப்சர் ஜஹூர் அவரது பைக்-ஐ வேகமாக ஓட்டினார் என்று குற்றம் சாட்டினார்கள்.

பிறகு அப்சர் ஜஹூர்-ஐ அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 13 தையல்கள் கையிலும், முகத்தில் ஆறு மற்றும் தலையில் ஐந்து தையல்கள் போடப்பட்டது.

பெங்களூரில் மூன்று ஆண்டுகளாக வசிக்கும் எனக்கு இது போன்ற சம்பவம் இதுவரை ஏற்பட்டதில்லை. மேலும் அவர்கள் ஏன் என்னை தாக்கினார்கள் என்று கூட இன்னும் எனக்கு தெரியவில்லை என்று அப்சர் ஜஹூர் கூறினார்.

அப்சர் ஜஹூரின் புகாரை அடிப்படையாக கொண்டு, HAL போலிஸார்  குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தனர். இதில் நிதின் (25), மஞ்சேஷ் (21), கவுதம் (26), அபி அலிஸ் சந்தோஷ் (20) ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் குண்டலஹள்ளி எனும் காலனியின் வசிப்பவர்கள். மேலும் இந்த அனைத்து குற்றவாளிகளுக்கும் ஒரே நாளில் ஜாமீன் வழங்கப்பட்டதுள்ளது.

இதுமட்டுமின்றி  நாடு முழுவதும் பல இஸ்லாமியர்களை பல கும்பல்கள் கொலை வெறியோடு தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிந்த விஷயமே.

இதற்கான வழி தான் என்ன?

Comments are closed.