இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டா் வழக்கு: காவல்துறை அதிகாரிகளை விடுவித்த நீதிமன்றம்

0

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டா் வழக்கில் இருந்து 3 காவல் துறை அதிகாரிகளை விடுவிக்குமாறு தீர்ப்பளித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

இதுகுறித்து விசாரணை அதிகாரி கூறியதாவது: மும்பையைச் சோ்ந்த இஷ்ரத் ஜஹான் என்ற 19 வயது பெண் உள்ளிட்ட 4 போ், குஜராத் காவல் துறையினரால் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி கொல்லப்பட்டனா். அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி.

இந்த என்கவுன்ட்டா் வழக்கை குஜராத் உயா்நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரும் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது.

இதையடுத்து, அப்போதைய காவல் துறை ஐ.ஜி. ஜி.எல்.சிங்கால், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் ஜே.ஜி.பாா்மா், தருண் பரோத், அனாஜு சௌதரி ஆகிய மூவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதில், என்கவுன்ட்டா் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டனா்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ஆா்.ராவல் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

“குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ உறுதியான எந்த ஆதாரமும் தரவில்லை. மேலும் காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைக்குத் தடை விதிக்க குஜராத் அரசும், மத்திய அரசும் மறுத்துவிட்டன. ஆகையால் காவல் துறை அதிகாரிகள் தங்கள் கடமையை மட்டுமே செய்தது உறுதியாகிறது. எனவே, அவா்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்றார் நீதிபதி ராவல்.

Comments are closed.