ISI க்காக உளவு பார்த்த முன்னாள் தூதரக அதிகாரி மாதுரி குப்தா

0

ISI க்காக உளவு பார்த்த முன்னாள் தூதரக அதிகாரி மாதுரி குப்தா

முன்னாள் தூதரக அதிகாரி மாதுரி குப்தா, கடந்த 2010 ஆண்டின் போது அவர் இஸ்லாமாபாத்தில் பணியாற்றிய சமயத்தில் பாக்கிஸ்தானின் உளவு அமைப்பான ISI க்காக உளவு பார்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டில்லி சிறப்பு காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டு எட்டு வருடங்கள் கழித்த நிலையில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இவரை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சித்தார்த் சர்மா, அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் (Official Secrets Acts) பல பிரிவுகளின் கீழ் அவரை குற்றவாளி என்று தீர்பளித்துள்ளார். இருந்தும் அவருக்கு கூடுதல் தண்டனையான 14 வருட சிறைத்தண்டனை வழங்கக்கூடிய OSA இன் மிகக் கடுமான சட்டப் பிரிவுகளின் கீழ் குப்தாவை தண்டிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.

இது குறித்து நீதிபதி தெரிவிக்கையில், “இவரிடம் இருந்து எந்த ஒரு ஆவனமும் உளவாளிகளுக்கு அனுப்பப் படவில்லை. எனது மனதிற்கு, இவருக்கு 14 வருட தண்டனை வழங்க மின்னஞ்சலை மட்டும் வைத்து வாதத்தரப்பு வழக்கை நிறுவ இயலாது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானிற்கு இவர் கொடுத்ததாக கூறப்பட்ட தகவல்கள் தேசத்தின் பாதுகாப்பிற்கு சேதம் விளைவித்தது என்பதனை நிறுவது கட்டாயமானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குப்தாவை OSA பிரிவுகள் 3(1)(c), பிரிவு 5 மற்றும் இந்திய குற்றவியல் தண்டணைச்சட்டப் பிரிவு 120-B ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என்று கூறி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

இவர் பாகிஸ்தான் அதிகாரியான முபஷர் ரசா மற்றும் ஜம்ஷெத் ஆகியோருக்கு அவரது தொலைபேசியில் இருந்து முக்கிய ரகசியத் தகவல்களை மின்னஞ்சல் வழியாக அனுப்பிய குற்றச்சாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி டில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மேலும் இவர் ஜம்ஷெத் என்பவருடன் உறவில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தன் மீதான வழக்கு விசாரணையின் போது, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் கமிஷன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் தான் போலியாக இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

Comments are closed.