துபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்

0

ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான விசக் கருத்தை பரப்பியதற்காக, மேலும் ஒரு பாஜக அதரவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் காலமாக காலமாக சமூக வலைதளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளை பாஜகவும், இந்துத்துவ சங்பரிவார்களும் பதிவிட்டே வருகின்றனர். மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பதிவுகளை, அரபு நாடுகளில் பணிபுரிந்து வரும் பாஜக ஆதரவாளர்கள் தற்போது அதிகமாக பதிந்து வருகின்றனர்.

அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும், இவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் காழ்ப்புணர்ச்சி பதிவுளுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்திருந்தன.

மேலும் சமூக ஊடகங்களில் இஸ்லாமியர்கள் மீது விஷம கருத்துக்களை வெளியிடும் சங்பரிவார்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இஸ்லாமிய நாடுகளில் பணிபுரிந்து கொண்டு, இஸ்லாத்திற்கு எதிராக இவ்வாறு மதவெறியோடு செயல்படும் இந்தியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பீகார் சாப்ராவை சேர்ந்த பிரஜ்கிஷோர் குப்தா, என்ற பாஜக ஆதரவாளர் தொடர்ச்சியாக சமூக வலதளங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான விஷம கருத்துகளை பதிவிட்டதான் அவர் பணிபுரிந்த நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்துள்ளது.

துபாய், ராஸ் அல் கைமாவில் பணிபுரிந்த அவரை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நீக்கம் செய்ததாக நிறுவன மேலாளர் ஸ்டெவின் ராக் தெரிவித்துள்ளார்.

Comments are closed.