கனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்

0

கொரோனா பாதிப்பாக உலக முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து வரும் நிலையில் கொரோனாவை குணப்படுத்த இதுவரை போதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இப்படியிருக்க, இந்தியாவில் மட்டும் காலமாக காலமாக சமூக வலைதளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளை பாஜகவும், இந்துத்துவ சங்பரிவார்களும் பதிவிட்டே வருகின்றனர். மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பதிவுகளை, அரபு நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்துத்துவ வெறியர்களே தற்போது அதிகமாக பதிந்து வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகள், அரபு நாடுகளின் அரச குடும்பத்தினர்களின் கண்களுக்கு தென்பட, உடனே அவர்கள் அரபு நாடுகளில் உள்ள சங்பரிவார்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் வளைகுடாவில் பல இந்துத்துவாவினர்களுக்கு சட்டப்படியான நடவடிக்கைகளை சந்தித்து வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக கனடாவில் ஊரடங்கு கடைபிடிப்பதால் மசூதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கனடாவில் ரமலா நோன்பு காலத்தில் பொதுவில் ஒலிபெருக்கியில் பாங்கு அழைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாங்கு சொல்ல அனுமதித்ததால், கனடாவில் பணிபுரியும் இந்துத்துவ சங்பரிவாரான ரவி ஹூடா என்பவர், “அடுத்தது என்ன? ஒட்டகம் மற்றும் ஆடு சவாரிகளுக்கு தனி பாதைகள், தியாகம் என்ற பெயரில் வீட்டில் விலங்குகளை படுகொலை செய்ய அனுமதித்தல், முட்டாள்களை சமாதானப்படுத்தினால் வாக்களிப்பர்கள் என்பதற்காக அனைத்து பெண்களும் தலையில் இருந்து கால் வரை தங்களை மறைக்க வேண்டும் என்ற உத்தரவையும் இடவும். இவ்வாறு இஸ்லாமியர்களுக்கு எதிராக கனட அரசை கேலி செய்து பதிவிட்டுள்ளார்.

இந்துத்துவ சங்பரிவார் ரவி ஹூடாவின் விஷம கருத்தால் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்தது. ரவி ஹூடாவின் பதிவுகளை கண்ட பின் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து அவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.