இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வாக்குறுதி சட்டவிரோதமானது: ஐ.நா கண்டனம்!

0

மேற்குக் கரையிலுள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைப்பதாக, அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதி, சட்டவிரோதமானது என ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் போட்டியிடுகிறார். இத்தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் மேற்குக் கரை பகுதியிலுள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைகப்போவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளதாவது, “நெதன்யாகுவின் வாக்குறுதி செயல்படுத்தப்பட்டால், அது சர்வதேச சட்டத்தை அப்பட்டாமாக மீறும் செயலாகும். பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கை அடியோடு அழிந்து, அமைதியையும் குலைத்துவிடும்” என்றார்.

முன்னதாக, நெதன்யாகுவின் இந்த வாக்குறுதிக்கு சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சவூதி, துருக்கி கண்டனம்!

 

Comments are closed.