இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளத்தை குறைத்த மோடி அரசு!

0

இஸ்ரோவின் சாதனையை தனது சாதனை போல காட்டிய மோடி அரசு, சந்திரயான்-2 வெற்றிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளத்தை குறைத்துள்ளது.

சந்திரயான்-2 திட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஜூன் 12ஆம் தேதி சம்பள குறைப்பு உத்தரவு வந்தது. இதன்படி, ஜூலை 1ஆம் தேதி முதல் இஸ்ரோவின் 90% பணியாளர்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 10ஆயிரம் வரை சம்பள இழப்பை சந்தித்து வருகின்றனர்.

மோடி அரசின் இந்த முடிவை இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சம்பளத்தை மட்டுமே தாங்கள் நம்பியுள்ளதாகவும் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வருமான வாய்ப்பு எதுவும் தங்களுக்கு இல்லை எனவும் இஸ்ரோ பணியாளர்கள் சங்கமான SPACE ENGINEERS ASSOCOIATION (SEA) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து SEA சங்கம், இஸ்ரோ தலைவர் சிவனுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், “பாஜக அரசின் இந்த முடிவால் விஞ்ஞானிகள் ஊக்கமிழப்பார்கள். செயல்திறன் தொடர்பான ஊக்கத்தொகை திட்டம் எந்த அரசாங்க ஊழியரின் அடிப்படை ஊதியத்தையும் பாதிக்கக்கூடாது. ஆறாவது ஊதிய ஆணையம் பரிந்துரைகளும் அப்படியே உள்ளது. ஆகவே மோடி அரசின் இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும்” என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

Comments are closed.