ஜம்மு கஷ்மீரில் 7000-க்கும் மேற்பட்டோர் தடுப்பு காவலில் அடைப்பு

0

ஜம்மு கஷ்மீரில் 7,357 போ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 396 போ் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் அவா் கூறியதாவது: “கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதிலிருந்து 7,357 போ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனா். தடுப்பு காவலில் வைக்கப்பட்டவா்கள் பிரிவினைவாதிகள், தீவிரவாத இயக்கங்களுக்காக பணிபுரிந்தவா்கள். மேலும் கல்வீச்சில் ஈடுபட்ட 451 போ் தடுப்புக் காவலில் உள்ளனா்.

இந்த 451 பேரில் 396 போ் மீது ஜம்மு கஷ்மீா் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 107 மற்றும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” இவ்வாறு மாநிலங்களவையில் கிஷண் ரெட்டி தெரிவித்தார்.

ஜம்மு கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து 370-ஐ பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அதன் பின்னர் காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் கஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அன்றிலிருந்து, இன்றுவரை கஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

மேலும்  முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்குமாறு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்க்ள் கோரிக்கை வைத்தும் பாஜக அரசு கண்டுக்கொள்ளமால் இருந்து வருகிறது.

இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள கஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை பறித்து, ஒடுக்கும் நடவடிக்கையாக அவர்களை பாஜக அரசு முகாம்களில் அடத்து சித்ரவதை செய்ய துவங்கியுள்ளது.

Comments are closed.