கஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.? -உமர் அப்துல்லாஹ் கேள்வி

0

ஜம்மு கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து 370-ஐ பாஜக அரசு கடந்த ஆண்டு நீக்கியது. அதன் பின்னர் காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் கஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அன்றிலிருந்து, இன்றுவரை கஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

மேலும் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்குமாறு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்க்ள் கோரிக்கை வைத்தும் பாஜக அரசு கண்டுக்கொள்ளமால் இருந்து வருகிறது.

பின்னர் பலரது கோரிக்கைகளால் உமர் அப்துல்லா மட்டும் முன்று மாதங்களுக்கு முன்பு வீட்டு சிறையிலிருந்து அடையாளம் தெரியாது நபர் போல நிரைத்த மீசை, தாடியுடன் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஓராண்டு ஆகி விட்டது. தற்போது காஷ்மீரில் வன்முறை, ஊழல் குறைந்து விட்டதா? முதலீடுகள் குவிந்து விட்டதா? ஆட்சி மேம்பட்டு விட்டதா? மக்கள் இப்போது அந்நியமாக உணரவில்லையா.? காஷ்மீரில் பண்டிட்டுகள் குடியமர்த்தப்பட்டு விட்டார்களா.. என்று முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள கஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை பறித்து, ஒடுக்கும் நடவடிக்கையாக அவர்களை பாஜக அரசு முகாம்களில் அடத்து சித்ரவதை செய்ய துவங்கியுள்ளது.

Comments are closed.