மோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்

0

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான நிவாணத்தை வழங்காமலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கையும் எடுக்காமலும் பாஜக இருந்து வருகிது.

இந்நிலையில், நாடு முழுவதும் சிக்கித் தவிக்கும் லடாக் மக்களை அழைத்து வர யூனியன் பிரதேச நிர்வாகம் தவறிவிட்டதாக கூறி லடாக் பாஜக தலைவர் செரிங் டோர்ஜய் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் நோயாளிகள், மாணவர்கள் உட்பட சுமார் 20,000 பேர் உள்ளனர். அவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கத்தை ஆட்சி செய்யும் கட்சியில் இருப்பது தேவையற்றது என கூறி தனது ராஜினாமா கடித்தை செரிங் டோர்ஜய் பாஜக தலைமையிடம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செரிங் டோர்ஜய் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நாடாவுக்கு எழுதிய கடிதத்தில், “லடாக்கில் நிர்வாகம் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்காமல் உணர்ச்சியற்ற நிலையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக லடாக் ஆளுநர், பாஜக தேசிய துணைத் தலைவர் மற்றும் லடாக் கட்சி விவகாரங்களுக்கான பொறுப்பாளர் அவினாஷ் ராய் கன்னா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டனர்.

ஆனால், அவர்கள் முழு முயற்சியுடன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிர்வாகம் எந்த நம்பிக்கையும் மக்களுக்கு அளிக்கவில்லை. இந்த நிர்வாகத்தை நம்பி பயனில்லை” எனக் குறிப்பிட்டு கட்சியில் இருந்து விலகவதாக அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.