“நாங்கள் பாஜகவுக்கு எதிரானவர்கள்: தேசத்திற்கு அல்ல”- ஃபரூக் அப்துல்லாஹ்

0

ஜம்மு கஷ்மீர் மாநிலத்திடம் இருந்து பறிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவை மீண்டும் கொண்டுவரும் குப்கார் தீர்மானத்திற்கான மக்கள் கூட்டணி தலைவராக ஃபரூக் அப்துல்லாஹ் தேர்வு செய்யப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவை ரத்து செய்ததற்கு எதிராகவும், மீண்டும் 370-வது பிரிவை கொண்டுவர கோரியும் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

இக்கூட்டத்திற்கு பின் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லாஹ் நிருபர்களிடம் கூறுகையில், “ஜம்மு கஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெறக் கோரி போராடுகிறோம். குப்கார் தீர்மானத்திற்கான மக்கள் கூட்டணி என்பது தேச விரோதமானது என்று பாஜக தவறான, பொய்யான பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. பாஜக கூறுவது உண்மை அல்ல. எங்கள் அமைப்பு பாஜகவுக்கு எதிரானதே தவிர தேசவிரோதமானது அல்ல.

எங்கள் நோக்கம் ஜம்மு கஷ்மீர், லடாக் மக்கள் இழந்த உரிமைகளை பெற வேண்டும் என்பதுதான். அதுதான் எங்கள் போராட்டம். இதை தவிர போராட்டம் இல்லை. மதத்தின் பெயரை கூறி பாஜக ஜம்மு கஷ்மீர், லடாக் மக்களை பிரிக்க முயன்று வருகிறது. இந்த முயற்சி வெற்றி பெறாது. இது மதரீதியான போர் அல்ல. எங்களின் அடையாளத்திற்கான போர். அதனாலே நாங்கள் ஒன்றாக இணைந்துள்ளோம்” இவ்வாறு ஃபரூக் அப்துல்லாஹ் தெரிவித்தார்.

Comments are closed.