கஷ்மீரில் கல்வியை பாழாக்கிய மோடி அரசு- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

0

ஜம்மு கஷ்மீரில் கடந்த 2 மாதங்களாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், அப்பாவி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா தெரிவித்துள்ளாா்.

ஜம்மு கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து மத்திய பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மிரில் கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. அதனால் காஷ்மிரில் கடந்த 2 மாதங்களாக மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை செய்தியை சுட்டுரையில் பதிவேற்றம் செய்த பிரியங்கா, இந்த நிலைக்கு மத்திய அரசும், நரேந்திர மோடியுமே காரணம் என்று கூறியுள்ளார்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு கஷ்மீரில் கடந்த 2 மாதங்களாக நடைமுறையில் உள்ள முழு அடைப்பால், அப்பாவி குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை குறித்து எந்நேரமும் பேசும் மத்திய அரசு, குழந்தைகளை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்கிறது. இத்தகைய அரசு வேறு எங்கும் இருக்காது. எதிா்கால சந்ததியினருக்கு பாஜக அரசு என்ன கூற முயற்சிக்கிறது என்று தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

Comments are closed.