ஒரு மாதமாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத ஜம்மு காஷ்மிர்!

0

ஆகஸ்டு 5 ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.

அதற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்டு 4 ஆம் தேதியில் இருந்தே ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் முழுக்க முழுக்க ராணுவம், சிஆர்பிஎஃப் என்று பாதுகாப்புப் படைகளின் வசம் கொண்டுவரப்பட்டது. ஒரு மாதம் ஆகும் நிலையில் இன்றும் காஷ்மிரில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை.

கடை வீதிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்று ஒரு மாதம் வரையும் எதுவும் இன்னும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவில்லை.

கடந்த வாரம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதாக அறிவித்தாலும் மாணவர்களின் வருகை இல்லை என காணப்படுகிறது. அரசு அலுவலகங்களில் கூட 50 சதவிகிதம் அரசு ஊழியர்கள் கூட வந்து செல்வதில்லை.

ஜம்மு காஷ்மிர் அரசின் செய்தித்தொடர்பாளர் ஹோஹித் கன்சால் இதுபற்றி கூறியதாவது, அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த காஷ்மீரின் வாழ்க்கை முப்பது நாட்களாகியும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என தெரிவித்தார்.

Comments are closed.