ஜம்மு காஷ்மிர் மறுகட்டமைப்பு மசோதாவில் தவறுகள்!

0

ஜம்மு காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்தை நாடாளுமன்றத்தில் ரத்து செய்து நிறைவேற்றப்பட்ட மறுசீரமைப்பு சட்டத்தில் 52 பிழைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மிர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதில் ஜம்மு காஷ்மிர் சட்டமன்றமுள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது.

ஜம்மு காஷ்மிர் மறுசீரமைப்பு சட்டத்தில், எழுத்துப்பிழை மற்றும் சொற்களில் உள்ள தவறுகளை சரிசெய்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது, சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சகம்.

அதில், “ஜம்மு காஷ்மிர் யூனியன் பிரதேம்” என்பதற்கு பதிலாக “ஜம்மு காஷ்மிர் மாநிலம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் “பாதுகாவலர் (Guardian)” என்பதை “பாதுகாவர்கள் (Guardians)” என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் “1916” ஆம் ஆண்டை “1960” என்றும், “ஜாதி பட்டியல் (Scheduled Caste)” என்று இருந்ததை “ஜாதி பட்டியல்கள் (Scheduled Castes)” என்று மாற்றப்பட்டுள்ளது. “குழந்தைகள்” என்பதை மாற்றி “குழந்தை” என்றும்,  “திருமணம்” என்பதை “திருமணங்கள்” என்று திருத்தம் செய்யப்பட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தவறுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்.

Comments are closed.